திருவாலங்காடு - வடாரண்யேசுவரர் கோயில்
பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
சம்பந்தர்,
அப்பர்,
சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற இச்சிவாலயம்
இந்தியாவின் தமிழகத்தில் சென்னைக்கருகே அமைந்துள்ளது.
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்துவந்து வழிபட்ட தலம் எனப்படுகிறது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்)
சிறப்புகள்
- நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.
- மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.
- இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.
- கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் உள்ளன.
- மூன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா,
நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர்,
கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக
அமைக்கப்பட்டுள்ளன.
- இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.
- சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.
- சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம்.
- இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.
- கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது.
- கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.
- பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.
- மூலவர் சுயம்பு மூர்த்தி.
- பழையனூருக்குச் செல்லும் வழியில்,
திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.-ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர்
தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த
மண்டபம் ' உள்ளது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து
இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரில்
'சாட்சி பூதேஸ்வரர் ' சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் உள்ளது.
- தீப்பாய்ந்த வேளாளர்களின் மரவில் பழையனூரில்
தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச்
செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும்
சேவைக்கு சந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில்
"கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை,
கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக
வைத்துள்ளனர். இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது
தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள்
என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழச்
செய்கிறது.
- கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.
-
No comments:
Post a Comment