Friday 25 January 2013

Kurungaleeswarar temple,koyambedu pic 16--20






சென்னை : கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில்
சென்னை : கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் .கடந்த 900 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது குறுங்காலீஸ்வரர் கோவில். இக்கோவில் பல்லவ, சோழ, விஜயநகர மற்றும் குறுநில மன்னர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. பல மானியங்களும் அளிக்கப்பட்டதாக, 21 கல்வெட்டுகள் கூறுகின்றன.சோழ மன்னர் குலோத்துங்க சோழர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு ராஜகோபுரம் கட்ட பணி துவங்கப்பட்டு மொட்டை கோபுரமாக நின்று போனது. தற்சமயம்
 ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம், முற்றிலும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களைக் கொண்டு கட்டப்பட உள்ளத.
 தலவரலாறு:
 ராமனின் ஆணையால் கர்ப்பிணியாக இருந்த சீதையைக் கானகத்தில் விட்டுவிட்டு வந்தான் இலக்குவன். அது வால்மீகி இருந்த வனப்பகுதி என்பதால், வால்மீகியே சீதாதேவியைத் தன் ஆசிரமத் தில் வைத்துக் காப்பாற்றினார். அங்குதான் லவ- குசர்களை சீதா பிராட்டி பெற்றெடுத்தாள். வால்மீகி யின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க் கப்பட்டு, சிறந்த கல்விமான்களாக வும் வில் வித்தையில் சிறந்தும் விளங் கினர். ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தபோது திக் விஜயமாக அனுப்பி வைத்த குதிரையை லவ-குசர்கள் கட்டிப் போட்டனர். குதிரையை மீட்க வந்த பரத- சத்ருக்னர்களை அவர்கள் போரில் அழித்தபோது ராமனே குதிரையை மீட்க நேரில் வந்தார். அப் போது அனுமன் மூலம் லவ-குசர்கள் தமது குமாரர்களே என்று அறிந்து, போரினை நிறுத்தி சீதாபிராட்டி யையும் கண்டு மகிழ்ந்தார்.
 வால்மீகி முனி வரின் ஆசிரமம் அமைந்திருந்த இடமே தற்போது சென்னை மாநகரிலுள்ள கோயம்பேடு என்று அழைக்கப்படும் இடமாகும். தன் சிறிய தந்தையரை அழித்த பாவம் தீர லவ-குசர்கள், வால்மீகியால் அருளாணைப்படி ஈஸ்வர பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தார்கள். இப்படி கோயம்பேடு பகுதியே ராமாயண காவியத் தொடர் புடையதாகவும், வால்மீகி ஆசிரம மாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்கு வதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக் கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக விளங்குகிறது


No comments:

Post a Comment