Friday 30 November 2012

karaneeswarar temple,saidapet pic 1--5






This temple has a 7-storied Gopuram with two prakarams(closed precincts of a temple). The main deity is Lord Karaneeswara and Goddess Swarnaambikai. This temple has a beautiful tank. The temple will be very much crowded on Pradhosham days.Annual ten day Brahmotsavam takes place in the Tamil month of Chithirai. During chitirai thirvizha lakhs of people from different area were meet each other.Everyday evening there will be a spiritual talk on Thiruvasagam which describes the beauty of great lord shiva.On the "Shiv Rathri" occasion the temple will become more glorious.Everyday, a very tasty "Prasadham" will be given in the evening which is prepared by the temple authority. Lord Karaneeswara is very powerful god



சென்னை சைதாப்பேட்டை இரயில் நிலையம் அருகாமையில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் ஆலயம். பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் சிவபெருமான் அருளிய தலம் இது. பழம் பெருமை கொண்ட தலங்களில் ஒன்றான திரக்காரணீச்சுரத்தில் திருக்காரணீஸ்வரர் தாயார் சொர்ணாம்பிகையோடு காட்சி தருகிறார்.

மகிமை பல புரியும் காரணீஸ்வரர் இங்கு எழுந்தருளியிருப்பதற்கு காரணம் உண்டு.

வசிஷ்டமுனி கேட்டார் என்று தன்னால் அனுப்பப்பட்ட காமதேனு பசு நீண்ட நாளாக திரும்பி வராததைக் கண்டு அச்சமுற்றான் இந்திரன். பூஜையின்போது இடையூறு செய்தது என்பதால் காமதேனு பசுவை காட்டுப்பசுவாக வசிஷ்டமுனி மாற்றிவிட்டார் என்று அறிகிறான். திருமயிலைக்கும், திருவான்மியூருக்கும் இடையே தென்மேற்கு திசையில் சோலை ஒன்றை உருவாக்கி சிவனை பூஜித்து வந்தால் காமதேனுவை மீண்டும் அடையலாம் என முனிகணங்களிலொருவர் மூலம் தெரியவர தனது வாகனமான கார் எனும் மேகங்களை அனுப்பி அப்பகுதியை மழையால் குளிர்வித்தான். அந்த பிரதேசமே சோலைவனமாக காடசியளித்தது. தானும் அங்குச் சென்று தடாகம் ஒன்றை உருவாக்கி அச்சோலைக்குள் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான் இந்திரன்.

இந்திரனின் பூஜையால் மனமிரங்கிய பரமேஸ்வரன், காமதேனுவை மீட்டுக் கொடுத்ததுடன் கார் அனுப்பி இப்பகுதியை குளிர்வித்தபடியால் இத்தலம் ‘காரணி’ என அழைக்கப்படும் என்றும், இந்திரன் இங்கு கோபதியானதால் அவன் உண்டாக்கிய தடாகம் ‘கோபதி சரஸ்’ என வழங்கப்படும் என்று அருளி மறைந்தார்.

இத்திருகாரணீஸ்வரர் ஆலயத்தின் மேற்கில் உள்ள கோபதி சரஸில் ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் ஸ்நானம் செய்து திருக்காரணீஸ்வரரை வேண்டிவந்தால் தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

அதுமட்டுமல்ல,ஸ்ரீதேவிக்கும், சரஸ்வதிக்கும் ‘யார் பெரியவர்’ என்கிற மோதல் ஒருமுறை ஏற்பட்டது. அங்கு வந்த பிரம்மனோ ‘ஸ்ரீதேவிதான் உயர்ந்தவர்’ என்று சொல்லிவிட, கோபமான சரஸ்வதி, பிரம்மனின் கை சிருஷ்டிதண்டத்தை பறித்துக்கொண்டு போய்விட்டார். பின்னர் பிரம்மா, சிவனை பூஜித்து தனது சிருஷ்டி தண்டத்தை மீட்டெடுத்த இடம் இந்த திருக்காரணீச்சரம்தான்.

இவ்வாலயத்திற்கு பழம் பெருமை உண்டென்றாலும் சென்ற நூற்றாண்டில்தான் ராஜகோபுரமும், உள் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இறைவன் திருக்காரணீஸ்வரர் கிழக்குத்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி சொர்ணாம்பிகை தெற்கு திசை நோக்கி நின்று அருள் புரிகிறார். முதல்வன் விநாயகனுக்கும், அவர் தம்பியாம் சுப்பிரமணிய சுவாமிக்கும் சந்நிதிகள் உண்டு. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி வளாகத்திற்கு அறுபடை வீடு காட்சிக் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

சொர்ணாம்பிகை சமேத திருக்காரணீஸ்வரரோடு வேதகிரீஸ்வரரும், திரிபுரசுந்தரியும் கோயிலுள் குடியிருக்கிறார்கள். சனீஸ்வரனும், அகோரவீரபத்திரரும் தனித்தனி சந்நிதி கண்டுள்ளனர்.

ஆனியில் திருமஞ்சனம், சித்திரையில் கொடியேற்றம், ஐப்பசியில் கந்தசஷ்டி, மார்கழியில் ஆருத்ரா, தையில் தெப்பம் என்று ஆண்டு முழுவதும் திருவிழாக்கோலம் பூணும் திருக்காரணீஸ்வரர் ஆலயத்தில் மற்றொரு விசேஷமும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதியை ஆண்டுவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

-->

1 comment: