Wednesday, 6 March 2013

valleeswarar temple,thiruvalithayam,pic 1--5




சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம்.

பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும்.

குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது.

இத்தலம் சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப் பட்டிருக்க வேண்டும். திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21வது தலம்.

மன்னர்கள் போர் காலங்களில் பாடி என்னும் பாசறை அமைத்து அதில் படை வீரர் களுடன் தங்குவது வழக்கம்.அவர்கள் இறைவழிபாடு நட த்தியபின் போருக்கு செல்வர். போரில் வெற்றி பெற்ற பின் இறைவனுக்கு திருவலி தானம் செய்வர். அதாவது மன்னருக்கு மெய்க்காப்பாளர்களில் சிலர் தமது தலையை வெட்டி காணிக்கை செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது.அந்த வலி...யை திருவலி என்று கொண்டிருக்கலாம்.எனவே திருவலி தானம் என்பது திருவலிதாயம் என்று மருவி இருக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இக்கோவிலில் தேர்த்திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுப்பது முக்கிய நிகழ்வு ஆகும். தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டு அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள் அனைவரும் தீக்குழியில் இறங்குவதுடன் விழா நிறைவு பெறுகிறது.




 sri Thiruvallidhayar Temple at Padi
Significance: One of the 275 sacred temples glorified by the Thevara hymns
Location: Near Padi main junction, just opposite TVS group of factories, about 200 meters from the main road.
Main deity: Thiruvalinadhar and Jagandhambal also known as Thayammai in separate shrines
Legend: The legend goes back to Mahabharatha days as Sage Bharadwaj (Dhrona’s father) had visited this temple. The name Validhayam comes from Valiyan – the black bird. Once Sage Bharadwaj took birth as a bird due to a curse and he worshipped Shiva here to clear off his curse. Legend also holds that Vinayahar got married to Kamalai and Vimalai daughter of Brahma in this place. Brahaspathi, Vishnu, Hanuman, Sugreeva, Rama, Agasthiar, Vayu, Indhra, Agni, Sun God and Moon God worshipped Shiva of this place.
Temple: This is considered as one of the Guru Parihara sthalams and Guru Bhagwan has a separate shrine here. A three tiered Rajagopuram and a Gajaprishta vimanam adorn this temple which spans an area of over an acre.
Sthala vruksham: Padiri.
Theertham: Baradwaja teertham.

No comments:

Post a Comment