குறுங்காலீஸ்வரர் கோவில்: தல வரலாறு
அயோத்தியில்
ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை
நிரூபிக்க
ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள், லவன், குசன் என்னும் 2
மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என
தெரியாமலேயே,
லவகுசர் வளர்ந்தனர்.
இந்நேரத்தில்
ராமபிரான்,
அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு
வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும்
ராம
பிரான் மீது
கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.
அப்போது ஒரு
யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டுவிட்டனர்.
குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள்
கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்
சுமணருடனும்
போரிட்டு வென்றனர். இவர்களைத்தேடி ராமனும் இங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி
லவகுசர்களிடம்,
ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான்
காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.
இருப்பினும், தந்தையை எதிர்த்தால் லவகுசருக்கு பித்ரு
தோஷம்
பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம்
நீங்கப்பெற்றனர்.
சுவாமிக்கு "குசலவபுரீஸ்வரர்' என்று பெயர் சூட்டப்பட்டது
No comments:
Post a Comment