Thursday, 10 January 2013

agastheeswarar temple,villivakkam,chennai pic 1--5





கைலாயத்தில் சிவன் திருமணம் நடந்தபோது, தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு வில்வலன், வாதாபி என்னும் சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்து விட்டார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூஜைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூஜைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அவரது தோஷத்தையும் போக்கினார்.

காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார்.
வில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் இவ்வூர், "வில்லிவாக்கம்' என்றழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது அகத்தியர் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது.



ஐஸ்வர்ய வீரபத்திரர்: அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப்பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமிதோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது.


இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, "ஐஸ்வர்ய வீரபத்திரர்' என்று அழைக்கிறார்கள்.


செவ்வாய் கோயில்: நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது.

தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, "செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.




Sri Agastheeswarar Temple at Villivakkam
This is a 9th century temple spread over a 2 acre space. Sage Agasthiar got the Brammaharthi dhosham after killing the demons Villavan and Vathabi. Since the demon Villavan was killed here, this is called Villavanpakkam and later Villivakkam. Agasthiar got his dhosham cleared off by worshipping Shiva here and Shiva gave dharshan to Agasthiar on a Tuesday. One of the Navagrahas Angarahan (Mars – Tuesday) took bath in the temple tank, now called Angaraha Theertham and worshipped Shiva to clear off his dhosham. So taking a bath in the temple tank on a Tuesday is considered very sacred.
Lord Shiva, in the name Agastheeswarar is facing east and Ambal Swarnambikai is facing south.
As Ambal and Guru are facing each other directly in this Kshetra, it is said that all those girls who worship Ambal receive the grace of Guru and get married soon.






.

3 comments:

  1. It is a great blog. Need time to read all. Let me try to read all. Thanks to Face book which brought Namasiyam as face book friend. So that I could read the Pokkisham of this blog.

    ReplyDelete
  2. I am very happy to read about our Native place Agastheeswarar Temple. Very nice blog spot I am also very much involved in Thirumandhiram verses.Just today I entered and immersed in your blog spot. Thank you very much. G.Prabakaran now From Montevideo, Uruguay

    ReplyDelete