Friday, 25 January 2013

Kurungaleeswarar temple,koyambedu pic 16--20






சென்னை : கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில்
சென்னை : கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் .கடந்த 900 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது குறுங்காலீஸ்வரர் கோவில். இக்கோவில் பல்லவ, சோழ, விஜயநகர மற்றும் குறுநில மன்னர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. பல மானியங்களும் அளிக்கப்பட்டதாக, 21 கல்வெட்டுகள் கூறுகின்றன.சோழ மன்னர் குலோத்துங்க சோழர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு ராஜகோபுரம் கட்ட பணி துவங்கப்பட்டு மொட்டை கோபுரமாக நின்று போனது. தற்சமயம்
 ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம், முற்றிலும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களைக் கொண்டு கட்டப்பட உள்ளத.
 தலவரலாறு:
 ராமனின் ஆணையால் கர்ப்பிணியாக இருந்த சீதையைக் கானகத்தில் விட்டுவிட்டு வந்தான் இலக்குவன். அது வால்மீகி இருந்த வனப்பகுதி என்பதால், வால்மீகியே சீதாதேவியைத் தன் ஆசிரமத் தில் வைத்துக் காப்பாற்றினார். அங்குதான் லவ- குசர்களை சீதா பிராட்டி பெற்றெடுத்தாள். வால்மீகி யின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க் கப்பட்டு, சிறந்த கல்விமான்களாக வும் வில் வித்தையில் சிறந்தும் விளங் கினர். ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தபோது திக் விஜயமாக அனுப்பி வைத்த குதிரையை லவ-குசர்கள் கட்டிப் போட்டனர். குதிரையை மீட்க வந்த பரத- சத்ருக்னர்களை அவர்கள் போரில் அழித்தபோது ராமனே குதிரையை மீட்க நேரில் வந்தார். அப் போது அனுமன் மூலம் லவ-குசர்கள் தமது குமாரர்களே என்று அறிந்து, போரினை நிறுத்தி சீதாபிராட்டி யையும் கண்டு மகிழ்ந்தார்.
 வால்மீகி முனி வரின் ஆசிரமம் அமைந்திருந்த இடமே தற்போது சென்னை மாநகரிலுள்ள கோயம்பேடு என்று அழைக்கப்படும் இடமாகும். தன் சிறிய தந்தையரை அழித்த பாவம் தீர லவ-குசர்கள், வால்மீகியால் அருளாணைப்படி ஈஸ்வர பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தார்கள். இப்படி கோயம்பேடு பகுதியே ராமாயண காவியத் தொடர் புடையதாகவும், வால்மீகி ஆசிரம மாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்கு வதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக் கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக விளங்குகிறது


Kurungaleeswarar temple,koyambedu pic 11--15







குறுங்காலீஸ்வரர் கோவில்:தல பெருமை
குறுங்காலீஸ்வரர்: பிற்காலத்தில் இத்தலத்து சிவலிங்கம், மணலால் மூடப்பட்டது. சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு "குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. "குசலவம்' என்றால் "குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருப்பதால், அம்பிகைக்கு மவுசு அதிகம். அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.

சூரியபகவான் சிறப்பு: அம்பாள் சன்னதிக்கு முன்புறம் உள்ள நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நடுவில் சூரியன், உஷா, பிரத்யுஷாவுடன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் மீது நிற்கிறார். தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளையும் பிடித்தபடி, சாரதியாக இருக்கிறார். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சூரியன், தனது தேரில் பயணிக்கும் நாளைக் கணக்கில் வைத்தே ஒவ்வொரு வருடமும் கணக்கிடப்படுகிறது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பிறக்கும் வேளையில் சூரியபகவானை ரதத்தின் மீது, அதுவும் மனைவியருடன் இந்த கோலத்தில் தரிசனம் செய்வது விசேஷம். சித்திரை மாதம் ரதசப்தமியின் போதும் இவருக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, ரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம்.

சிறப்பம்சம்: இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப் பணம் செய்யலாம். கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில்

சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக் கிறது. லவகுசர்கள் "கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, "அயம்' என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் "கோயம் பேடு' என பெயர் பெற்றது. "பேடு' என்றால் "வேலி' எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது "கோசைநகர்' என்று குறிப்பிட்டுள்ளார்.






Kurungaleeswarar temple,koyambedu pic 6--10






குறுங்காலீஸ்வரர் கோவில்: தல வரலாறு
அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை
நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள், லவன், குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர்.
இந்நேரத்தில் ராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராம
பிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.
அப்போது ஒரு யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டுவிட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்
சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத்தேடி ராமனும் இங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவகுசர்களிடம், ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.
இருப்பினும், தந்தையை எதிர்த்தால் லவகுசருக்கு பித்ரு
தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர்.
சுவாமிக்கு "குசலவபுரீஸ்வரர்' என்று பெயர் சூட்டப்பட்டது